சாதனையா சோதனையா
எப்ப பாரு மொபைல்
உடைக்க போறேன் என்று கூறிய பெரியவர்கள் இன்று 24X7 நேரமும் மொபைலை வைத்துக்கொண்டு குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இது சாதனையா சோதனையா..
உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும் உறவினர்கள் நம் வீட்டிற்கு வந்தாலும் 5 லிருந்து 10 நிமிடங்கள் பார்மாலிட்டி ஆகஏதேனும் ஒரு பேச்சு பிறகு அவரவர் அவரவர் செல்பேசியை எடுத்துக்கொண்டு மூலைக்கு ஒருபக்கமாக நாற்காலிக்கு ஒருவராக அமர்ந்து விடுவார் கேட்டால் சோசியலிசம் என்பார்கள்.
இது சாதனையா சோதனையா
அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா அத்தை சித்தப்பா சித்தி என தன்னை சுற்றி அனைவரும் மொபைல் போனை வைத்திருக்க மிரண்டு விழிக்கும் குழந்தை இது ஏதோ அத்தியாவசியமான பொருள் போல நமக்கும் ஒன்று தேவை என்று நினைத்து அழுது அடம்பிடித்து நம் கையில் இருந்து போனை பிடுங்கும்.
எப்ப பாரு போன் கேக்குது என்ற அந்த குழந்தையையே குற்றம் சாட்டுவார்கள். இது சாதனையா சோதனையா
என்னடா படிக்காமல் போனை நோண்டிக்கிட்டு இருக்க என்று கேட்டால் போனில் படிக்கிறேன் என்று வாய்கூசாமல் சொல்லும் இன்றைய இளைய தலைமுறையினர்.
போனை வைத்துவிட்டு படி என்று கூறிக்கொண்டு தனது போனை எடுத்து ஹெட்செட்டை பொருத்தி காதில் வைத்துக் கொண்டு செல்லும் பெரியவர்கள்.
இது சாதனையா சோதனையா.
எங்கு திரும்பினும் மொபைல்
எல்லாவற்றிலும் மொபைல்
பிறந்த குழந்தைக்கு வெல்கம் டு த வேர்ல்ட் மெசேஜ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அந்த குழந்தை அதை பார்க்கவா போகிறது..
இறந்தவர்களை நினைத்து மிஸ் யூ மெஸேஜ் அவர்கள் அதை பார்க்கவா போகிறார்கள்.ஆக நமது சந்தோஷங்களும் வருத்தங்களும் அடுத்தவர்களுக்கு தெரிவிப்பதற்காக அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காக நமக்காக அல்ல.
உலகத்தை தனக்குள் கொண்டு வந்ததோடு நில்லாமல் உலக மக்களையும் தனக்குள் கொண்டு வந்துவிட்டது இந்த மொபைல் போன்..
இது சாதனையா சோதனையா...
மொபைல் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் எழுதியிருப்பார் இந்த காலத்தில் வாழ்ந்திருந்தால்...
No comments:
Post a Comment